search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரோலினா பிளிஸ்கோவா"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.



    முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.



    மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

    மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஒரு காலிறுதியில் ஜோகோவிச் (செர்பியா)- நிஷிகோவி (ஜப்பான்) மோதுகிறார்கள். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    டோக்கியோல் நடைபெற்று வந்த பெண்களுக்கான பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். #NaomiOsaka
    ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா - 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.



    செரீனாவை வீழ்த்தி அமெரிக்கா ஓபனை கைப்பற்றிய முதல் ஜப்பான் வீராங்கனை என்று பெயரெடுத்த  ஒசாகா சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் கரோலியான பிளிஸ்கோவா சிறப்பாக விளையாடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    ×